;
Athirady Tamil News

உயிரோடு இருக்கும் புறாவின் தலையை துண்டாக கடித்து ஆக்ரோசமாக துப்பிய கொடூர இளைஞன்: வீடியோ வெளியானது..!!

0

அயர்லாந்தில் புறாவின் தலையை துண்டாக கடித்து தரையில் ஆக்ரோசமாக போட்ட இளைஞர் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அயர்லாந்தின் Derry பகுதியில் இளைஞர் ஒருவர் தன்னுடைய கையில் புறா ஒன்றை வைத்திருந்தார். அதன் பின் திடீரென்று அந்த புறாவின் தலையை கடித்து துப்பிவிட்டு, புறாவை ஆக்ரோசமாக கீழே போட்டார்.

இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

அதில் ஒருவர் இந்த வீடியோ பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்படி ஒரு செயலை எப்படி அவருக்கு செய்ய மனம் வந்தது என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் அயர்லாந்து பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அந்த நபர் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்

மேலும் இது குறித்து Royal Society for the Prevention of Cruelty to Animals அமைப்பைச் சேர்ந்த நபர், இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன், இது குறித்து பொலிசாரின் விசாரணை சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − sixteen =

*