;
Athirady Tamil News

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா தொடங்கப்பட்ட நாள்: 28-7-1959..!!

0

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.

இது 1958-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது இதற்கு முன் வானூர்தியியல் ஆராய்ச்சிகளுக்காக இருந்த, தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவைக் (நாகா) கலைத்து அதன் வடிவில் நிறுவப்பட்டது. இதன் ஆண்டு வரவு செலவு, 2012-ல் 17.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1900 – இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.

* 1907 – சர் பேட்டன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற்படியாக இருந்தது.

* 1921 – ஹிட்லர் ஜெர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.

* 1944 – இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

* 1948 – இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.

* 1957 – அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

* 1967 – வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் பொரெஸ்டல் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − one =

*