;
Athirady Tamil News

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது..!!

0

மொனராகல, கும்புக்கன பகுதியில் அனுமதி இல்லாமல் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை மொனராகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நீண்டகாலமாக மாணிக்க அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புத்தள, மாகொடயாய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை மொனராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மொனராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 5 =

*