;
Athirady Tamil News

ஏறாவூர் : மின்கம்பத்துடன் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்..!!

0

ஏறாவூரில் மின்சார சபையினரின் திருத்தப்பணி வாடகை வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மீராகேணி,முஸ்லிம் பாடசாலைக்கு அருகில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளதோடு மின்கம்பம் முறிந்து வீழ்ந்ததினால் வீதியருகிலிருந்த கடைகளும் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் ஒருவர் படுகாமமைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − fifteen =

*