;
Athirady Tamil News

நகரசபையால் புதிதாக பொருத்தப்பட்ட சில மின்விளக்குகள் செயலிழப்பு: மக்கள் விசனம்..!!

0

நகரசபையால் புதிதாக பொருத்தப்பட்ட சில மின்விளக்குகள் செயலிழப்பு: மக்கள் விசனம்

வவுனியா நகரசபையால் புதிதாக பெகாருத்தப்பட்ட சில வீதி மின்விளக்குகள் செயலிழந்து விட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபையால் 400 தானியங்கி மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு வீதிகளில் பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் புதிதாக மின் விளக்குகள் பொருத்தப்பட்ட நகரசபைக்குட்பட்ட சில இடங்களில் உள்ள சில மின் விளக்குகளின் உணரிகள் (சென்சர்) செயலிழந்தமையால் மின் விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் தரமற்ற மின் விளக்குகளை பொருத்தி நகரசபை தம்மை ஏமாற்றி விட்டதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + ten =

*