;
Athirady Tamil News

வவுனியாவில் புலைமைப்பரிசில் தோற்றவுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு கருத்தரங்கு..!! (படங்கள்)

0

வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள கிராமப்புற மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு (28) வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயம், இராசேந்திரங்குளம் அ.த.க. பாடசாலை, மூன்று முறிப்பு அ.த.க.பாடசாலை, கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம், மற்றும் பாரதி வித்தியாலயத்தை சேர்ந்த நூறு மாணவர்கள் இவ் இலவச புலைமைப்பரிசில் கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர்.

இப் புலைமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கில் யாழ் மற்றும் வவுனியா முன்னணி ஆசிரியர் எஸ்.எஸ். தீபன் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.

இவ் புலைமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்

கிராமப்புறங்களில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் திறமையை மேலும் விருத்தி செய்யவும் எதிர்வரும் புலைமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளை மாணவர்கள் பெற்றக்கொள்ளும் நோக்கில் அவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*