;
Athirady Tamil News

வவுனியாவில் 10 குளங்களில் நன்னீர் பிடியில் ஈடுபடும் மீனவர்கள்..!!

0

வவுனியா மாவட்டத்தில் 10 குளங்களில் நன்னீர் மீன்பிடி இடம்பெறுவதாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி நிசாந்தன் யோகநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட நன்னீர் மீன்பிடி தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 719 குளங்கள் இருப்பதாக தரவுகள் இருக்கின்ற போதும் 10 குளங்களில் மாத்திரமே பதிவு செய்யப்பட்ட நிலையில் நன்னீர் மீன்பிடி இடம்பெறுகின்றது. இதில் 14 மீன்பிடிச் சங்கங்களைச் சேர்ந்த எழுநூற்று 42 பேர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இன்னும் பல குளங்களில் நன்னீர் மீன்பிடியை ஊக்கிவிக்க முயற்சிகள் இடம்பெறுகின்ற போதும் ஆர்வம் செலுத்துவோர் தொகை குறைவாகவுள்ளது. தற்போது சந்தையில் நன்னீர் மீன்களுக்கும், நன்னீர் மீன் கருவாடு என்பவற்றுக்கும் கேள்வி இருக்கின்ற போதும் உற்பத்தி குறைவாக காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 1 =

*