;
Athirady Tamil News

அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இலவச நடமாடும் சேவை பூநகரியில் இடம்பெற்றது..!! (படங்கள்)

0

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பூநகரியில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று(29-07-2018) பூநகரி மத்திய கல்லூரியில் இந் நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது.

இதன் போது பதிவாளர் அலுவலகம், பிரதேச செயலகம், கிராம அலுவலர், ஆட்பதிவுத்திணைக்களம், பொலீஸ், தபால், சமூகசேவைகள், சமூர்த்தி, காணி சீர்திருத்த ஆணைக்குழு, மோட்டார் போக்கவரத்து, சட்ட விரோத ஆணைக்குழு, மின்சார சபை, தேசிய வீடமைப்பு, ஊழியர் சேமலாக நிதி, மத்திய வங்கி, அரசகரும மொழிகள், சுகாதார திணைக்களம், போன்ற திணைக்களங்களின் சேவைகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலளர் கிருஸ்ணேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகெண்டனர்.

நடமாடும் சேவையை பார்வையிட்ட அமைச்சர் குழுவினர் பிரதான நிகழ்வு மண்டபத்தில் சட்டரீதியாக திருமணம் செய்யாது சுமார் 10 வருடங்களாக இல்லறவாழ்வில் இணைந்திருந்த நான்கு தம்பதிகளிற்கு சட்டரீதியான திருமண பதிவினை மேற்கொண்டதுடன், திருமண சான்றிதளையும் வழங்கி வைத்தனர். இதேவேளை குறித்த நடமாடும் சேவையில் முதியோர் அடையாள அட்டைகள், பிந்திய பிறப்பு சான்றிதள்கள், உள்ளிட்டவை வழங்கி வைக்கப்பட்டதுடன், பூநகரி கோட்டத்திற்குட்ப்ட்ட பாடசாலைகளில் வறுமைக்குாட்டின் கீழ் உள்ள 500 பாடசாலை மாணவர்களிற்கு பாடசாலை சீருடை துணிகளும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − three =

*