;
Athirady Tamil News

மிளகாய்த் தூள் தூவி பணம் கொள்ளை; இருவர் கைது.!!!

0

புளத்சிங்கள பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைப்பிட எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு கோடியே 24 இலட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த அதிகாரிகள் உணவகம் ஒன்றில் உணவு உட்கொள்வதற்காக சென்ற வேளையில் அவர்கள் மீது மிளகாய் பொடித் தூவி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த வங்கியின் பாதுகாப்பு ஊழியர் மற்றும் வாகன சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

தனியார் வங்கிக்குச் சொந்தமான வானொன்றில் ஒரு பாதுகாப்பு அதிகாரி இரண்டு வங்கி அதிகாரிகள் மற்றும் வாகன சாரதியுட்பட நால்வர் அடங்கிய குழுவினால் இரண்டு கோடியே 24 இலட்சம் ரூபா பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பணமானது புளத்சிங்கள ஹொரண வீதி பஹல நாரகல பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் அறுவர் அடங்கிய கொள்ளை கும்பலினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

புளத்சிங்கள பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொள்ளையர்களுக்கு உதவும் வகையில் செயற்பட்டுள்ளதான சந்தேகத்தின் பேரில் வாகன சாரதி மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வங்கியிலிருந்து பணத்தொகையை வெளியில் எடுத்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து பணம் கொள்ளையடித்து செல்லப்பட்ட காலப்பகுதியில் குறித்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொலைப்பேசி அழைப்புக்கள் மற்றும் சி.சி.டீவி பதிவுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − five =

*