;
Athirady Tamil News

பா.ஜ.க அரசுகளால் அச்ச உணர்வில் இருக்கும் தலித் மக்களை நாம் நெருங்க வேண்டும் – ராகுல் காந்தி..!!

0

அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி அணியினருக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள தலித் மற்றும் சிறுபான்மையின மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வை அக்கட்சியினர் ஏற்படுத்தியுள்ளனர்.

பா.ஜ.க. மந்திரிகள் மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் நாடு முழுவதும் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருகின்றனர். இது போன்ற பேச்சுகளால் ஈர்க்கப்படும் அக்கட்சி தொண்டர்களினால் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இது போன்ற மோசமான சம்பவங்களுக்கு பா.ஜ.க.வினர் வெளிப்படையாகவே ஆதரவு தேரிவிக்கின்றனர். எனவே, பாஜக அரசுகளால் அச்ச உணர்வில் இருக்கும் தலித் மக்களை நாம் நெருங்க வேண்டும். அவர்களை அச்ச உணர்வில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காத சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்வது காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி அணியினரின் பொறுப்பாகும்.

தற்போது பா.ஜ.க அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இதுபோன்ற துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக பொது விவாதம் நடத்துவதற்கான அவசர தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த, விவகாரத்தை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும்படி உங்களுக்கு கோரிக்கை வைக்கின்றேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 6 =

*