;
Athirady Tamil News

சிரம்மசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் வவுவுனியா சகாயமாதாபுரத்தில் அடிக்கல் நாட்டு விழா..!! (படங்கள்)

0

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஊருக்கு ஒரு கோடி சிரம்மசக்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வேலைத்திட்டத்தின் ஒருகட்டமாக வவுனியா சகாயமாதபுரத்தில் அமைந்துள்ள பொதுக்கிணற்றிற்கான சுற்றுமதில் மற்றும் வடிகாலமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று மதியம் சன்சைன் இளைஞர் கழக தலைவர் திருச்செல்வம் கிருஸ்ரிராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது வவுனியா நகரசபை உப தவிசாளர் குமாரசாமி மற்றும் நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்களால் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இவ் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வவுனியா நகரசபை உப தவிசாளர் குமாரசாமி, உறுப்பினர் சு.காண்டீபன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சன்சைன் இளைஞர் கழக உறுப்பினர்கள், சகாயமாதாபுர மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 6 =

*