;
Athirady Tamil News

என்னுடைய மகள் நிலைமைக்கு இது தான் காரணம்! தயவு செய்து பெற்றோர்களே இது மட்டும் செய்யாதீர்கள் என தாய் உருக்கம்…!!

0

அமெரிக்காவில் 17 வயது இளம் பெண் ஒருவர் தொடர்ந்து சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனி சாப்பிட்டு வந்ததால், தற்போது அவருக்கு பித்தப்பை நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Tennessee பகுதியைச் சேர்ந்தவர் Rene Craighead. 17 வயதான இந்த பெண்ணிற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் அவருடைய பித்தப்பை அகற்றப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது தாய் சொன்ன தகவல் பெற்றோர் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தகவல் எனவும் கூறப்படுகிறது

தன்னுடைய மக்களுக்கு சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் மிகவும் பிடிக்கும், இதனால் நான் வெளியில் செல்லும் போது எல்லாம் அவள் சிப்ஸ் வாங்கிட்டு வாருங்கள் அம்மா என்று கூறுவாள்

நானும் மகள் ஆசைப்படுகிறாளே என்று அவள் கேட்கும் போது எல்லாம் சிப்ஸ் வாங்கி வந்து கொடுப்பேன். வாரத்திற்கு நான்கு பெரிய சிப்ஸ் பாக்கெட்டுகளை சாப்பிட்டுவிடுவாள்.

அதுமட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் போதும், சிப்ஸ் பாக்கெட்டுகளை கொண்டு செல்வாள். இந்நிலையில் அவளுக்கு திடீரென்று சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது.

வயிற்று வலியால் துடித்தாள். அதன் பின் அவளை மருத்துவமனையில் அனுமதித்த போது, மருத்துவர்கள் பித்தப்பை அகற்ற வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவளுக்கு பித்தப்பை நீக்கப்பட்டது.

பித்தப்பை நீக்கப்படுவது சாதரணமான ஒன்று தான் என்றாலும், என்னுடைய மகளின் பித்தப்பை அகற்றியதற்கு முக்கிய காரணம் சிப்ஸ் தான் , இதனால் பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் ஏதேனும் சாப்பிடக் கேட்டால், பழங்கள் மற்றும் காய்கள் வாங்கிக் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

பித்தப்பை நீக்கப்பட்டால், அவர்களுக்கு செரிமான தொடர்பான பிரச்சனை ஏற்படும், இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிடும்.

அதுமட்டுமின்றி மாதத்திற்கு 100 குழந்தைகள் வயிற்று வலி காரணமாக தினமும் மருத்துவமனைக்கு வருவதாகவும், அதற்கு முக்கிய காரணம் அவர்கள் திண்ணும் நொறுக்குத் தீனியான சிப்ஸ் எனவும் கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*