;
Athirady Tamil News

வீடில்லாமல் சாலையில் படுத்திருந்தவரிடம் நடந்த அராஜகம்: சிரித்த இளைஞர்கள்..வெளியான வீடியோ..!!

0

பிரித்தானியாவில் வீடில்லாமல் சாலையில் இருந்தவரை இளைஞர் ஒருவர் இரக்கமே இல்லாமல் முகத்தில் குத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Burnley நகரில் உள்ள சாலையோரத்தில் வீடில்லாத ஒருவர் தங்கியிருந்தார்.

அவரருகில் இரண்டு இளைஞர்கள் சென்றனர். அப்போது ஒரு இளைஞர் அவரிடம் பேசி கொண்டிருந்தபோது திடீரென முகத்தில் வேகமாக குத்தினார்.

இதை இன்னொரு நபர் வீடியோ எடுத்ததோடு இருவரும் சேர்ந்து பலமாக சிரித்தனர்

பின்னர் இளைஞர்கள் அங்கிருந்து சென்ற நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து வீடியோவை பார்த்த பொலிசார் விசாரணையில் இறங்கினார்கள்.

பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில், வீடியோவில் நபரை குத்திய இளைஞரை கண்டுப்பிடித்துவிட்டோம்.அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் இரக்கமற்ற செயலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*