;
Athirady Tamil News

நவாஸ் ஷரீப்புக்கு உடல்நலக் குறைவு – சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்..!!

0

லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் கடந்த 13-ம் தேதியில் இருந்து ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நவாஸ் ஷரிப்புக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்புக்காக அடிடாலா சிறைக்குள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நவாஸ் ஷரீப்புக்கு சிறுநீரகம் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்நிலையில், அடிடாலா சிறைச்சாலையில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்ற நவாஸ் ஷரீப், பாகிஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது உடல்நிலையை கவனித்து வருவதாக தெரிவித்தனர். #

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − six =

*