;
Athirady Tamil News

கருங்காலி மரப்பலகைகளுடன் இருவர் கைது..!!

0

புத்தல – ஒக்கம்பிட்டிய பகுதியில் ´களுவற´ எனப்படும் கருங்காலி மரப்பலகைகளை லொறி ஒன்றில் சட்ட விரோதமாக கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரால் புத்தல பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாலிகாவில பகுதியில் இருந்து மொனராகலை பகுதிக்கு குறித்த கருங்காலி மரப்பலகைகளை ஏற்றிச்சென்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளனர்.

600,000 ரூபா பெறுமதியான 111 மரப்பலகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் புத்தல மற்றும் ஒக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*