;
Athirady Tamil News

“மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­ய­மாட்டோம்”..!!

0

மத்­தள விமான நிலை­யத்தை விற்­ப­னை­ செய்ய ஒரு­போதும் இட­ம­ளிக்­க ­மாட்டோம். அர­சியல் நோக்­கத்­துக்­கா­கவே இது ­தொ­டர்­பாக கருத்­துக்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­யப் ­போ­வ­தாக எதிர்க்­கட்­சி­களால் தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் தொடர்ந்து கூறு­கையில்,

மத்­தள விமான நிலை­யத்தை விற்­பனை செய்­வது தொடர்­பாக எந்த தீர்­மா­னமும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை. விமான நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பா­கவே அமைச்­ச­ர­வைக்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்று முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அவ்­வாறு தீர்­மானம் ஒன்று எடுப்­ப­தாக இருந்தால் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை பெற்­றுக்­கொண்டு அதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தி­யையும் பெற்­றுக்­கொண்­டதன் பின்­னரே இந்­தி­யா­வுக்­கோ சீனா­வுக்கோ அல்­லது வேறு நாடொன்­றுக்­கோ வழ ங்­கு­வது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுப்போம். எங்­க­ளுக்கு தேவை இந்த

விமான நிலை­யத்தை அபி­வி­ருத்திசெய்வ­தாகும். அதன் மூலம் தொழில் வாய்ப்­புகள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட ­வேண் டும்.

அத்­துடன் இந்த விமான நிலை­யத் தில் அதி­க­மான விமா­னங்கள் இறக்­கு­வ­தற்கு தேவை­யான வேலைத்­ திட்டங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட ­வேண்டும். அது­ தொ­டர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மாக இருந்தால், அது தொடர்­பாக அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை பெற்­றுக்­கொள்ள தீர்­மா­னித்தால் அதற்கு நாங் கள் அனு­ம­திப்போம். எங்­க­ளுக்கு தேவை இந்த விமானநிலையம் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­ வேண்டும். அத்­துடன் அந்த தீர்­மா­னங்கள் நாட்­டு க்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

மத்தள விமான நிலைய த்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யப் போவதாக சில அரசியல் குழு வொன்றேபிரசாரம் செய்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 1 =

*