;
Athirady Tamil News

வவுனியாவில் கள்விற்பனை நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

கள் விற்பனை நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா செங்கல்படை கிராமமக்களினாலும் பாடசாலை மாணவர்களாலும் வீதி மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பூவரசங்குளம் செங்கல்படை கிராமத்தில் கடந்த சில நாட்களாக கள் விற்பனை நிலையம் ஒன்று அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் கிராமமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.

கள் விற்பனை இன்று முதல் நடைபெறவிருந்த நிலையில் இதனை அகற்றக்கோரி கிராமமக்களினால் இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ‘நாம் சுதந்திரமாக கல்வி கற்பதற்கு எமது ஊரில் கள்ளுக்கடை அனுமதியை இரத்து செய்’, ‘எமது கிராமத்தில் கள்ளுக்கடை திறப்பதன் மூலம் எமது சிறுவர்கள் மது பானத்திற்கு நிச்சயம் அடிமையாவார்கள்’, ‘வவுனியா அரசாங்க அதிபரே எமது ஊரில் கள்ளுக்கடை அனுமதியை இரத்து செய்’ என்ற சுலோகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இதனை அடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியதையடுத்து வீதி மறியல் போராட்டம் கிராமமக்களினால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செங்கல்படை கிராமத்தில் அமையவுள்ள கள் விற்பனை நிலையம் பாடசாலையில் இருந்து 850 மீற்றர் தொலைவிலும் கோவிலில் இருந்து 350 மீற்றர் தெலைவிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*