;
Athirady Tamil News

ரஞ்சன் ராமநாயக்க வழக்கு – குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சட்ட மா அதிபர்..!!

0

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக, மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (30) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியசர் பியசாத் டெப், விஜித் மலல்கொட மற்றும் டீ.பீ தெஹிதெனிய ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபரினால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் தண்டனை வழங்கததற்கான காரணத்தை தெரிவிக்குமாறு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பிரதி ஒன்று நீதிமன்றத்தினால் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றப் பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அது தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆகஸ்ட மாதம் 8 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்தி பிரதி அமைச்சருக்கு எதிராக உரிய தண்டனையை வழங்குமாறும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பான காணொளியை பரிசீலத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பார்த்ததுமே அவர் நீதிமன்றைத்தை அவமானப்படுத்தும் விதமாக பேசுவது தெளிவாக தெரிவதால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படை சட்ட மா அதிபரினால் இந்த குற்றப்பத்திரிகை முன் வைக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 16 =

*