;
Athirady Tamil News

வெளிநாட்டு பெண் தங்கியிருந்த வீட்டில் 886 கிராம் ஹெரோயின் பறிமுதல்..!!

0

தெஹிவளை, டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட போது அங்கு இருந்த பையில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 886 கிராம் ஹெரோயின் போதைப்பொருளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சோதனை செய்யப்பட்ட வீட்டில் வெளிநாட்டு பெண் ஒருவர் வசித்து வந்துள்ளதாகவும் சோதனை நடைபெற்ற வேளை அப்பெண் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 16 =

*