;
Athirady Tamil News

பாகிஸ்தானில் 5 காலி ஓட்டுப் பெட்டிகள் ரோட்டின் ஓரம் கண்டெடுப்பு..!!

0

பாகிஸ்தானில் கடந்த 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக் – இ- இன்சாப் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

தனி மெஜாரிட்டி கிடைக்காததால் சுயேட்சை எம்.பி.க்களுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க இம்ரான்கான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். வருகிற பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்டு 14-ந்தேதிக்கு முன்னதாக பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் ஓட்டு எண்ணிக்கையின் போது ராணுவ உதவியுடன் முறைகேடு நடத்தி அவர் வெற்றி பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் பார்வையாளர்களாக இருந்த ஐரோப்பிய யூனியன் குழுவினர் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக மறைமுகமாக கூறியுள்ளனர். நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) உள்பட பல எதிர்க்கட்சிகளும் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் மீண்டும் ஒளிவு மறைவு அற்ற முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், கராச்சி நகரில் வாக்கு சீட்டுகள் இல்லாத 5 காலி ஓட்டு பெட்டிகள் ரோட்டோரம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள காஷ்மீர் பூங்கா அருகே அவை கிடந்தன.

இந்த தொதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி வேட்பாளர் கவாஜா முகமது ஆசிப் வெற்றி பெற்றுள்ளார். இவரிடம் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உஸ்மான்தா தோல்வி அடைந்தார்.

இகுறித்து தகவல் அறிந்ததும் உஸ்மான் தா தனது ஆதரவாளர்களுடன் அங்கு திரண்டு நவாஸ் செரீப் கட்சிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார். பதிவான ஓட்டுகளை அகற்றி விட்டு வெற்றி பெற்றுள்ளனர் என புகார் கூறினார். அதற்கு நவாஸ் செரீப் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தோல்வியை தழுவிய அவர் மக்களிடம் அனுதாபத்தையும், ஆதரவையும் திரட்ட முயற்சிக்கிறார் என்றனர்.

மேலும் சியல் கோட் என்ற இடத்தில் குயாதாயித் பகுதியில் பிரசித்தி பெற்ற வணிக வளாகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து 12 வாக்கு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இத்தகவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட மொசாம் அலி குரேஷி போலீசாரிடம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + sixteen =

*