;
Athirady Tamil News

அசாமில் வசிக்கும் 40 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் – மக்கள் தொகை பதிவேட்டில் தகவல்..!!

0

வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.

இதுபற்றி “மாநில தேசிய மக்கள் தொகை பதிவு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் கஜிலா கூறும் போது ‘3,29,91,384 மொத்த விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் இப்போது இந்தியாவின் சட்டவிரோத குடிமக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இறுதி வரைவு அடிப்படையில் எந்தவொரு நாடுகடத்தலும் இருக்காது’ என தெரிவித்தார்.

விடுபட்ட நபர்கள் குடிமக்கள் தேசிய பதிவு ஆணையத்தில் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது, பின்னர் நீதிமன்றங்களை அணுகலாம். இறுதி வரைவில் சேர்க்கப்படாத நபர்கள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஆகியவற்றை தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − four =

*