;
Athirady Tamil News

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்..!!

0

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமான Patricia Scotland நாளை மறுதினம்(புதன்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர் நாளை மறுதினம்(புதன்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா, இளைஞர் விவகார திட்ட முகாமைத்துவ மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக, பொது நிர்வாகம் முகாமைத்துவம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இதன்போது பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துதல், 2018ஆம் ஆண்டில் பொதுநலவாய அரச தலைவர்களுடன் லண்டனில் இடம்பெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் ஆராயவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் அவர், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*