;
Athirady Tamil News

மனைவி மீது சந்தேகம்! மணமகனின் கையை கடித்த நபர்- பிரித்தானியாவில் சம்பவம்..!!

0

பிரித்தானியாவின் Aberystwythஇலுள்ள ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக காத்திருந்த மணமகனின் கையை ஒரு நபர் கடித்ததால் வரவேற்பு நிகழ்ச்சி தடைபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணமக்கள், வரவேற்பில் நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகளுக்காக காத்திருந்தபோது அவர்கள் இருந்த அறையின் கதவை மோதி உடைத்து Neil Jones (35) என்னும் ஒரு நபர் கோபத்துடன் உள்ளே நுழைந்தார்.

மணமக்களின் நண்பர் ஒருவர் மீது பாய்ந்த அவர், அந்த நண்பர் தனது மனைவியுடன் தனது அறையில் பாலுறவு கொண்டதாகக் கூறி அவரைத் தாக்க முயன்றார்

தங்கள் நண்பர் தாக்கப்படுவதைக் கண்ட மணமகனான Damian Paine குறுக்கே புகுந்து சண்டையைத் தடுக்க முயன்றபோதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. Neil Jones, மணமகனின் கையைப் பிடித்து பலமாக கடித்தார்.

பலர் வந்து மணமகனின் கையை விடுவிக்க முயன்றும் அவரது கையை விடுவிக்க முடியவில்லை.

பின்னர் பொலிசார் வந்து Neil Jonesஐக் கைது செய்தனர். மணமகனுக்கு நிகழ்ந்த அசம்பாவிதத்தால் மணமகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்

உடனடியாக Damian Paine மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, தொடர்ந்து நடைபெற இருந்த கேக் வெட்டுதல் உட்பட அனைத்து நிகழ்வுகளும் தடைபட்டன.

தங்கள் திருமணத்தன்று இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டதால் மணமக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 11 =

*