;
Athirady Tamil News

மெர்க்கலிற்கு பிடித்த உணவுகளுக்கு தடை விதித்த எலிசபெத் மகாராணி..!!

0

பிரித்தானிய அரச குடும்பத்திற்கான உணவு பட்டியலில், மெர்க்கலிற்கு பிடித்த உணவுகளுக்கு தடை விதித்து எலிசபெத் மகாராணி உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொண்டதிலிருந்தே மேகன் மெர்க்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரச குடும்பம் விதித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்பொழுது எப்படி அமர வேண்டும், எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்பது பற்றிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்த நிலையில் தற்போது அவருக்கு பிடித்த உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்தும் அரச சமையல்காரர் royal chef கூறுகையில், அரச குடும்பத்திற்கான உணவு பட்டியலில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளுக்கு மகாராணி தடை விதித்துள்ளார்.

அதன்படி, அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் பாஸ்தா போன்ற உணவுகள் இனி அரச குடும்பத்திற்கு பரிமாறப்படும் உணவுகளில் இடம்பெறாது என தெரிவித்துள்ளார்

மேலும், மகாராணிக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். எப்பொழுதும் வாழைபழத்தின் நுனி பகுதிகளை வெட்டி எறிந்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கியதையே அவர் உட்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு தனியார் இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மெர்க்கல், பாஸ்தா என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

மெர்க்கல்லிற்கு அடுத்தடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உறங்க செல்வதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என மகாராணியின் செயலாளர் William Heseltine கூறியுள்ளார்

இதுபற்றி அவர் கூறுகையில், மகாராணி செல்வதற்கு முன்னர் யாரும் உறங்க செல்ல மாட்டார்கள் என்பது அரச மரபு. ஆனால் மெர்க்கல் உறங்க செல்வதில் சிறிது மாற்றம் செய்யவேண்டியுள்ளது என கூறியுள்ளார். முன்னதாக இளவரசர் ஹரியின் தாயார் டயானா பல முறை அரச மரபுகளை மீறியதாகவும் அவர் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − thirteen =

*