;
Athirady Tamil News

வடகொரியாவில் ஜோராக விற்பனையாகும் நாய்க்கறி! வெயிலை சமாளிக்க இப்படியா?..!!

0

வட கொரியாவில் வெயிலால் நாய்களின் உயிருக்கு எதிர்பாராத ஆபத்து வந்துள்ளது. வெயிலைத் தாக்குப் பிடிப்பதற்காக வட கொரியர்கள் “முள்ளை முள்ளால் எடுப்பது” என்ற சொல் வழக்கைப்போல் சூடான நாய்க்கறியை உட்கொண்டு வருகின்றனர்.

வட மற்றும் தென் கொரியாவில் பொதுவாகவே நாய்க்கறி உடற்கட்டுக்கு நல்லது என கருதப்பட்டாலும் வெயில் காலம் வந்து விட்டால் காரசாரமான சூடான நாய் சூப் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.

அதுவும் நாய்க்கறி உண்ணூவதற்கு ஜூலை 17, 27 மற்றும் ஆகஸ்டு 16 ஆகிய மூன்று வெப்பம் மிகுந்த நாட்களும் விசேஷமானவை.

அது போதாதென்று பல இடங்களில் வெயில் வேறு 40 டிகிரியை நெருங்குவதால் இம்முறை நாய்க்கறிக்கு கிராக்கி அதிகமாகவே உள்ளது.

தென் கொரியாவைப் பொருத்தவரை அதிபர் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் ஆண்டொன்றிற்கு இரண்டு மில்லியன் நாய்கள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. வட கொரியாவிலும் நாய்கள் குறித்த பார்வை மாறத் தொடங்கியுள்ளது.

ஆனால் இது எதுவுமே தெரியாததுபோல வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிருகக்காட்சி சாலை ஒன்றிற்கு 30 வெவ்வேறு இன நாய்களைப் பரிசளித்துள்ளார்.

மிருகக்காட்சி சாலையின் அருகே எப்படி நாய்களை வளர்ப்பது, உணவளிப்பது என்பது போன்ற குறிப்புகளுடன் நாயை உண்ணக்கூடாது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது வேடிக்கையான ஒரு விடயம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + twelve =

*