;
Athirady Tamil News

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொடூரமாக குத்தி கொலை செய்த மணப்பெண்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

0

அமெரிக்காவில் திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையை மணப்பெண் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Colorado பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை காலை உள்ளூர் நேரப்படி 12.20 மணிக்கு பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதில் நபர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்த போது, நபர் ஒருவர் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். அதன் பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில்,Jacqueline Souza(33) என்ற பெண்ணும், அவரின் வருங்கால கணவருமான Brandon Watkins(31) இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதால், பார் ஒன்றில் சிறப்பாக கொண்டாடிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்

அப்போது தங்கள் திருமணத்திற்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்று வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அந்த நேரத்தில் Brandon Watkins தன்னுடைய முன்னாள் காதலியை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

Jacqueline Souza-வுக்கு அவருக்கு காதலி இருக்கிறாள் என்று தெரியாது எனவும், அப்படி அவள் திருமணத்திற்கு வந்தால் ஏதேனும் ஆகிவிடலாம் என்று எண்ணியும் ஆத்திரமடைந்துள்ளார்

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் சென்றுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த Jacqueline Souza வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரின் மார்பில் கொடூரமாக குத்தியுள்ளார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் வீட்டில் மிதந்து கிடந்துள்ளார். அதன் பின்னரே அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

மேலும் Jacqueline Souza ஏற்கனவே திருமணம் செய்து, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தவர் எனவும் Brandon Watkins முன்னாள் இராணுவ வீரர் எனவும் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் காரணமாக கைது செய்யப்பட்ட Jacqueline Souza நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அதன் பின் 50,000 டொலர் பிணைத்தொகை செலுத்து பெயிலில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 1 =

*