;
Athirady Tamil News

820 சுகாதார தொண்டர்களில் 360 சுகாதார தொண்டர்கள் தங்கள் பதிவினை மேற்கொண்டுள்ளனர்..!!

0

820 சுகாதார தொண்டர்களில் 360 சுகாதார தொண்டர்கள் தங்கள் பதிவினை மேற்கொண்டுள்ளனர். – வடமாகாண சுகாதார தொண்டர்களின் சங்க பிரதிநிதி

820 சுகாதார தொண்டர்களில் 360 சுகாதார தொண்டர்கள் தங்கள் பதிவினை மேற்கொண்டுள்ளனர். என வடமாகாண சுகாதார தொண்டர்களின் சங்க பிரதிநிதி சி.சுகந்தி

இன்று வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் திரிவிக்கையில்

2017ம் ஆண்டு 5ம் மாதம் 4ம் திகதி வடமாகாணத்தில் அனைத்து இடங்களிலும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அத்தோடு வடமாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை வேலைத்திட்டம் தொடர்பாக சந்தித்திருந்தோம். அவர்களிடம் உரையாடியதில் இருந்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பாக கதைப்பதற்கு எண் ரீதியாக வடமாகாணத்தில் உள்ள சுகாதார தொண்டர்களின் விபரங்களை கேட்டிருந்தனர். இதற்கமைய 26ம்,27ம் வடமாகாணத்தில் உள்ள சுகாதார தொண்டர்களின் விபரங்களை எங்களால் திரட்டப்பட்டிருந்தது.

கடந்த 26, 27 திகதிகளில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் 820 சுகாதார தொண்டர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 40 பேர், முல்லைத்தீவில் 43 பேர், வவுனியா 45 பேர், யாழ்ப்பாணம் 155 பேர், மன்னார் 70பேருமாக 360 சுகாதார தொண்டர்கள் தங்கள் பதிவினை மேற்கொண்டுள்ளனர். வடமாகாணத்தில் பதிவில் உள்ள 820 பேரில் 400 பேர் மட்டுமே கடமையில் இருக்கின்றது என்பதை வடமாகாண சுகாதார தொண்டர்களின் சங்கம் கணிப்பிட்டு வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*