;
Athirady Tamil News

இரண்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது..!!

0

தனமல்வில செவணகல பொலிஸார் மற்றும் மொனராகலை, லாஹுகல பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டை வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவணகல பொலிஸாரால் வெணகல நெலும்கம பிரதேசத்திலும் மற்றும் லாஹுகல பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் மஹகலுகொல்ல பிரதேசத்திலும் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*