பஸ் விபத்தில் 27 பேர் காயம்; நால்வரின் நிலை கவலைக்கிடம்..!!

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதி, மஹவெல- திம்புல்கமுவ பிரதேசத்தில், இன்று (31) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த 27 பேர், நாலந்த, மாத்தளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் நால்வரின் நலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இவர்கள், மாத்தளை வைத்தியசாலையின் அதித்தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.