;
Athirady Tamil News

மத்தள விமான நிலையத்தின் வருமானம் 12 இலட்சம் – செலவு 2500 இலட்சம்..!!

0

மத்தள விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாய் எனவும் அதற்கான செலவு 2500 இலட்சம் ரூபாய் எனவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

மதுகம சரணதிஸ்ஸ வித்தியாலயத்தில் நூலக கட்டிடத்தை திறக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், மத்தள விமான நிலையத்தின் மூலம் 12 இலட்சம் ரூபாய் மாதாந்த வருமானம் கிடைக்கின்றது. எனினும் அதற்கு 2500 இலட்சம் ரூபாய் செலவிடப்படுகின்றது. மத்தள விமான நிலையத்திற்கு நாட்டுப் பிரஜை ஒவ்வொருவரும் 800 ரூபா செலுத்தி உள்ளார்கள்.

முறையான ஒரு மதிப்பீட்டின்மையின் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அடுத்ததாக இரண்டாவது விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை அமைப்பதாகக் கூறி தனது முகத்தை தானே உடைத்துக் கொள்வதைப் போன்று செயற்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்கத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வது தொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரியுடன் எமது நாட்டு விமான நிலைய அதிகாரிகள் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எனினும் இது வரையிலும் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் இறுதி தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு நாட்டு மக்களுடன் திறந்த கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படும்,

நபர் ஒருவரின் பெயரை பிரசித்த படுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டுமா இல்லையா என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

இதனை பொருளாதார ரீதியில் செய்ய முடியும் என எந்தவொரு அரசியல் அல்லது பொருளாதார பற்றி தெரியாதவர்கள் அறிவற்ற விதத்தில் கதைத்தாலும் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு பொருளாதார ரீதியில் முன்னேர எமது நாட்டு விமான போக்குவரத்து அதிகார சபைக்கு முடியாது.

தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலமான வருமானத்தைக் கொண்டே மத்தள விமான நிலையம் பராமரிக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 2 =

*