பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்த மூன்று பெண்கள் கைது..!!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவத்தில் மூன்று பெண்கள் எகொடஉயன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகொடஉயன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை கைது செய்வதற்காக சென்ற போது அந்த நபரின் உறவுக்கார பெண்கள் மூவர் பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஹெரோயின் வைத்திருந்த நபரையும் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய மூன்று பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்றைய தினம் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.