;
Athirady Tamil News

ரூ.25 ஆயிரம் சம்பளம்- ஆளில்லா ரெயில்வே கேட்களில் முன்னாள் ராணுவனத்தினருக்கு வேலை…!!

0

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த ரெயில்வே கேட்களை கடக்க முயலும் பள்ளி வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் விபத்தில் சிக்குவதால் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இதனை தவிர்க்க உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ, வாரணாசி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆளில்லா ரெயில்வே கேட்களில் ஓய்வு பெற்ற 954 ராணுவ வீரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மண்டல ரெயில்வே மக்கள் தொடர்புத்துறை அதிகாரி சஞ்சய் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதே போல் மஹாராஜ்கஞ்ச், சன்ட் கபீர் நகர், கோன்டா, பல்ராம்பூர், பாராபன்கி மற்றும் சிதாபூர் மாவட்டங்களிலும் 450 ஆளில்லா ரெயில்வே கேட்களிலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட்களில் பணி நியமனம் செய்யப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ரெயில்வே வேலைவாய்ப்புக்கான இணையத்தளங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*