;
Athirady Tamil News

தண்ணீரில் சடலமாக கிடந்த குழந்தை: நான் கொல்லவில்லை என கதறிய தாய்… பின்னணி என்ன?..!!

0

பிரித்தானியாவில் 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தாய் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மைக்கேல் – கிளையர் (36) தம்பதியின் மகள் பித்தன் (3) வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் கடந்தாண்டு அக்டோபரில் மூழ்கி கிடந்தார்.

பின்னர் பித்தன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவள் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்

இதையடுத்து பித்தனை கொலை செய்ததாக அவரின் தாய் கிளையரை பொலிசார் கைது செய்தனர்

சிறை அடைக்கப்பட்ட கிளையர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது கதறி எழுந்த கிளையர் தனது மகளை தான் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யவில்லை என கூறினார்.

இதை கேட்ட நீதிபதி வழக்கை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டதோடு, கிளையரை பொலிஸ் காவலில் தொடர்ந்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*