;
Athirady Tamil News

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வௌிநாட்டு பணத்துடன் இருவர் கைது..!!

0

சட்ட விரோதமான முறையில் வௌிநாட்டு நாணயங்களை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

51 மற்றும் 57 வயதுடைய இரண்டு ஓமான் நாட்டு பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 09.40 மணியளவில் டப்ளியூ.வை. 0376 என்ற விமானம் மூலம் மஸ்கட் நோக்கி பயணிக்க முற்படும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வௌிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 15 =

*