;
Athirady Tamil News

வவுனியாவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொலிசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியாவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொலிசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு இன்று (31) வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ். தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்துகொண்டிருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கும், போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி சிறப்பாக பணியாற்றிய வவுனியா மாவட்டத்திலுள்ள 13 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 150 பொலிசாருக்கு வெகுமதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சமுதாய பொலிஸ் முறைமையின் கீழ் சிறப்பாக செயல்ப்பட்ட சமுதாய பொலிஸ் உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா போக்குவரத்து பொலிசாருக்கு 11 இலட்சத்து 25 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபா வெகுமதியாகவும், மற்றைய பொலிஸ் துறைகளுக்கு 9 இலட்சத்து 15 ஆயிரத்து 850 ரூபாவும் வெகுமதியாக வழங்கி வைக்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − four =

*