;
Athirady Tamil News

பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது – 01-08-1960..!!

0

பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் பிரதேசம் அமைந்துள்ளது. 1960-ல் பாகிஸ்தானில் தலைநகரான கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1820 – லண்டனில் ரீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

* 1831 – புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

* 1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38-வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

* 1894 – கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

* 1902 – பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

* 1902 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் நடந்த வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

* 1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிரௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

* 1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது

* 1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 15 =

*