;
Athirady Tamil News

பராகுவேயில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 396 பேர் பலி : 01-08-2004..!!

0

பராகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 396 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நான்சாங் என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

* 1936 – பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

* 1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

* 1944 – போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

* 1952 – தந்தை பெரியார் ரெயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

* 1960 – டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது

* 1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

* 1967 – கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

* 1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற ரெயில் விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

* 2002 – தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

* 2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

* 2007- யாழ்பல்கலைக்கழக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + five =

*