;
Athirady Tamil News

கருணாநிதியின் “வாவ்” போட்டோ வெளியானது.. ராகுல் நேரில் பார்த்தபோது எடுத்த படம்..!! (வீடியோ)

0

திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் பார்த்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கருணாநிதியின் முகம் மிகத் தெளிவாக உள்ளது. அந்தப் படத்தில் ராகுல் காந்தி, டாக்டர் கோபால், தயாநிதி மாறன் ஆகியோர் உள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் காதுக்கு அருகே சென்று ராகுல் காந்தி வந்திருப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியாகியுள்ள 2வது புகைப்படம் இது. சமீபத்தில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் புரோஹித் ஆகியோர் நேரில் போய் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. தற்போது ராகுல் காந்தி வந்து பார்த்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 4 =

*