;
Athirady Tamil News

உங்கள் உடம்பில் இவ்வாறான தழும்புகள் உள்ளதா? கவலையை விட்டு இதை டிரைப்பண்ணுங்க…!!

0

தழும்புகள் உங்கள் அழகையே கெடுக்கும். இதனால் அவதிபடும் நபர்களே இனி கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான சில எளிய டிப்ஸ்

ஆப்பிள் வினிகர்
முகப்பரு மூலம் ஏற்படும் தழும்புகளை போக்க ஆப்பிள் வினிகருடன் தேன் கலந்து தழும்பு உள்ள இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

லாவண்டர் எண்ணெய்
உடலில் காயங்களினால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தால் சந்தன் பவுடர் மற்றும் லாவண்டர் எண்ணெய் இரண்டையும் சேர்த்து தழும்பு உள்ள இடங்களில் தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் அது மறையும்.

வாஸ்லின்
ஒரு நாளைக்கு மூன்று முறை வாஸ்லினை இது போன்ற தழும்புகளின் மேல் தடவலாம்.

பெரிய தழும்புகள்
வெங்காய சாற்றை இதன் மேல் ஒரு நாளைக்கு மூன்று முறை தடவி வர தழும்பின் அளவு குறைப்பதோடு தோல்களை எந்த வித பின்விளைவும் இல்லாமல் மென்மை அடைய செய்யும்.

இது தீகாயம் மற்றும் சிகிச்சை மூலம் ஏற்பட்ட தழும்புகளை சரி செய்யும்.

ஆலிவ் எண்ணெய்
முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்து விடுபடலாம்.

ஆலோவீரா ஜெல்
ஆலோவீரா ஜெல்லை தினமும் இருமுறை தழும்புகளில் வட்ட வடிவில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eleven =

*