;
Athirady Tamil News

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது..!!

0

தனமல்வில பொலிஸ் பிரி​வில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ம் திகதி குறித்த சிறுமியை கடத்திச் சென்ற சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது சம்பந்தமாக தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி பலகருவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில, பலகருவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*