;
Athirady Tamil News

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள கிராம உத்தியோகஸ்தர்கள்..!!

0

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட், திரேசியா, மோரா, கியூ, சென்ஜோன்டிலரி, கிலானி ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த தோட்ட உத்தியோகஸ்தர்கள் இன்று புதன்கிழமை காலை ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சுமார் 7 மாத காலமாக மேலதிக கொடுப்பனவை வழங்கபடாது இடைநிறுத்தபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை பொகவந்தலாவ டின்சின் நகரில் முன்னெடுத்தனர்.

சுமார் 300 ற்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததனால் சுமார் ஒரு மணித்தியாலயம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் பணிபுரியும் தங்களுக்கு எவ்வித அறிவிப்புகளும் இன்றி எங்களுக்கு வழங்கபட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை.

ஏன் வழங்கவில்லையென தோட்டநிர்வாகத்திடம் கேட்டால் நிறுவனத்தில் இடைநிறுத்தபட்டுள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் தோட்டநிர்வாகமும் கம்பணியும் சேர்ந்து கொண்டு எங்களை பழிவாங்குவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

எங்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரவித்தே நாங்கள் தொழிலுக்கு செல்லாது இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.

எனவே எங்களின் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆர்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற பகுதிக்கு சமூகமளித்த ஹட்டன் பொலிஸ் நிலைய உதவி அத்தியட்சகர் தஸாநாயக்க தலைமையில் ஆர்பாட்டகாரர்களோடு கலந்துரையாடிய பிறகு ஆர்ப்பாட்டம் கைவிடபட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 6 =

*