;
Athirady Tamil News

குடைசாய்ந்த இராணுவ வாகனம்- பெண்கள் மூவர் காயம்..!!

0

படையினரின் வாகனம் சாலையைவிட்டு விலகி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த மூன்று பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கைதடி – கோப்பாய் சாலையில் நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது.

பலாலியிலிருந்து வந்த படையினரின் வாகனம் கைதடி கோப்பாய் சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக சாலையோரம் செலுத்திய போது சாலையை விட்டு விலகி குடைசாய்ந்ததெனத் தெரிவிக்கப்பட்டது.

அவ்வழியே வந்த வாகனத்தில் காயமடைந்த மூன்று பெண்களும் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*