;
Athirady Tamil News

கருங்கல் அருகே பஸ்சில் தூங்கிய கண்டக்டரிடம் 6 ஆயிரம் பணம் – டிக்கெட் திருட்டு..!!

0

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (வயது 53). இவர் ஆசாரிப்பள்ளம் ராணித்தோட்டம் அரசு பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

நாகர்கோவில்-மிடாலம் செல்லும் பஸ்சில் இவர் கண்டக்டராக சென்று வருகிறார். நேற்றும் இந்த வழித்தடத்தில் சென்ற பஸ்சில் இவர் பணியில் இருந்தார். வழக்கமான ஷிப்டுகள் முடிந்த பிறகு அந்த பஸ் நேற்று இரவு மிடாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த பஸ்சில் இரவு டிரைவரும், கண்டக்டர் கிருஷ்ணபிள்ளையும் படுத்து தூங்கினார்கள்.

இன்று காலை மீண்டும் பணியை தொடங்குவதற்காக டிரைவரும், கண்டக்டரும் தயாரானார்கள். அப்போது கண்டக்டர் கிருஷ்ணபிள்ளை தான் வைத்திருந்த பணப்பையை சரி பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த டிக்கெட் வசூல் பணம் ரூ.6,300 மற்றும் ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள பஸ் டிக்கெட்டுகள் மாயமாகி இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் தேடிப் பார்த்த போதும் பணம், டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.

இரவு நேரத்தில் பஸ்சில் கண்டக்டர் பணத்துடன் தூங்குவதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் பஸ்சுக்குள் ஏறி கண்டக்டரிடம் இருந்த பணத்தையும், டிக்கெட்டுகளையும் திருடி விட்டு தப்பிச் சென்று உள்ளனர்.

இந்த துணிகர திருட்டு பற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த திருட்டு பற்றி கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்சில் புகுந்து கண்டக்டரிடம் நடந்த திருட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one − one =

*