;
Athirady Tamil News

பிரியாணி தகராறு.. கூட்டாளிகளுடன் ஹோட்டலுக்குள் புகுந்து கேஷியரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி..!! (வீடியோ & படங்கள்))

0

திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ், சென்னை, விருகம்பாக்கத்திலுள்ள ஹோட்டலுக்குள் கூட்டாளிகளுடன் புகுந்து, ஊழியர்களை சரமாரியாக குத்தி காயப்படுத்தும் காட்சிகள் வைரலாகியுள்ளன. கடந்த 28ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹோட்டல் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஷட்டரை திறக்கச் சொல்லி, உள்ளே பத்து பதினைந்து கூட்டாளிகளோடு புகுந்த யுவராஜ், சரமாரியாக கேஷியர் முகத்தில் குத்துவிடுகிறார். தடுக்க முற்பட்ட கடை ஊழியர்கள் முகத்திலும் குத்துகிறார்.

அவர் கூட்டாளிகளும் குத்துகிறார்கள். சிசிடிவி காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் இப்போது வைரலாகியுள்ளன. கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் இதுபற்றி போலீசில் புகார் அளித்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். உரிமையாளர் குற்றச்சாட்டு இதுபற்றி தமிழ்ச் செல்வன் கூறுகையில், திமுகவை சேர்ந்த அந்த தம்பியும் அவர் கூட்டாளிகளும் தாக்கியதில், எனது கடை கேஷியருக்கு மூக்கில், தலையில் பல தையல்கள் போடப்பட்டுள்ளன.

வியாபாரிகள் சங்கம் இந்த சம்பவத்திற்கு எதிராக எங்களுடன், இணைந்துள்ளது. போலீஸ் துணை கமிஷனர், இன்ஸ்பெக்டரும், தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டபோது, அவர்களும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. கட்சி ரீதியாக தக்க நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர் என்றார்.

கடை ஊழியர் குமுறல் கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், கருணாநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பயன்படுத்திக்கொண்டு, இதுபோன்ற கலாட்டாவில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு ஹோட்டல் பூட்டப்பட்ட பிறகு அதை திறக்கச் சொல்லி பிரியாணி கேட்டனர். பிரியாணி இல்லை என்றபோது தாக்கினர். எப்போதுமே ஸ்கார்பியோ காரில் நண்பர்களோடு வருவதும், காரை ஹோட்டல் முன்னால் நிறுத்தி பிறருக்கு தொல்லை கொடுப்பதும், அதை நகர்த்தி விட சொன்னால் தகராறு செய்வதும் இவர்கள் வாடிக்கைதான்.

பாக்சர் போல குத்துகிறார் “நான் லோக்கல், நான் லோக்கல்” என கூறியபடி கெத்தோடுதான் எப்போதும் வருவார். கையில் போட்டிருந்த வளையம், பிரேஸ்லெட் போன்றவற்றை வைத்துதான் எங்களை தாக்கினர். இவ்வாறு அந்த ஊழியர் தெரிவித்தார். பாக்சரை போல துள்ளி துள்ளி குதித்தபடி கேஷியர் முகத்தில் திமுக நிர்வாகி குத்தும் காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்காரர்கள் சண்டை போடும் அளவுக்கு திராணி உள்ளவர்கள் அல்ல. ஏதோ பிழைப்புக்காக கடை நடத்துகிறார்கள். ஆனால் இந்த கும்பல் ஒவ்வொருவரும் பாக்ஸர் போல இருக்கிறார்கள். ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் உள்ளே இறங்கும் அளவுக்கு பலவான்களாகவும் உள்ளனர். இவர்கள் போட்டு அடிக்க இந்த அப்பாவிகள்தான் கிடைத்தார்களா.

எப்படி அடிக்கலாம் அதை விட்ருவோம்.. இப்படி கடைக்குள் விட்டு தாறுமாறாக அடிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது.. இதற்காகத்தான் கட்சியில் இருக்கிறார்களா இவர்கள்.. பேசிப் பேசியே பல புரட்சிகளை செய்த இயக்கத்தில் இருந்து கொண்டு இப்படி ரவுடித்தனம் செய்வதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ரவுடிகள் என்றுதான் அழைப்பார்கள் அண்ணாவும், கருணாநிதியும் பேசி வளர்த்த இயக்கம் இது.. ரத்தம் சிந்தி உழைத்து வளர்த்த இயக்கத்தில் இருந்து கொண்டு இப்படி உடம்பை நன்றாக வலுவேற்றி வைத்துக் கொண்டு அப்பாவிகளை அடித்து நொறுக்கும் இவர்களை எப்படி கட்சியினர் என்று கூறுவார்கள் பொதுமக்கள்.. ரவுடிகள், அடியாட்கள் என்ற அளவுக்குத்தான் இவர்களை அழைக்க முடியும்..

அழைக்க வேண்டும். கருணாநிதியை அவமானப்படுத்துகின்றனர் கருணாநிதி சுகவீனமாக இருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவையும் காண ஒட்டுமொத்த தமிழ் உலகமே காத்துக் கிடக்கிறது. ஆனால் பிரியாணி ஏண்டா தரலை என்று கேட்டு இப்படி மொத்திக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.. திமுகவுக்கு பெரும் அவமானம் இந்த குண்டர் கூட்டம் நிரந்தரமாக விரட்டியடியுங்கள் இதுபோன்றவர்களை அடித்துத் துரத்தி கட்சியை சரி செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.

அந்தப் பொறுப்பை இன்று அவர் உடனடியாக செய்தார். யுவராஜ் உள்ளிட்ட 2 குண்டர்களையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆனால் இது போதாது. நிரந்தரமாக இந்த ரவுடிகளை கட்சியை விட்டு நீக்க வேண்டும். ரவுடிகளுக்கு திமுகவில் இடமில்லை என்பதையும் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 6 =

*