;
Athirady Tamil News

வவுனியா ஒமந்தையில் மது போதையில் வந்தவர்களினால் முச்சக்கர வண்டிகள் சேதம்..!! (படங்கள்)

0

வவுனியா ஒமந்தையில் மது போதையில் வந்த இரு இளைஞகளினால் நான்கு முச்சக்கவன்டிகளின் கண்ணாடிகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் பற்றி தெரியவருவதாவது,

இன்று மாலை வவுனியா ஒமந்தை சந்தியில் அமைந்துள்ள முச்சக்கரவன்டி தரிப்பிடத்திற்கு மது போதையில் வந்த இரு இளைஞர்கள் அங்கு நின்ற முச்சக்கரவன்டி சாரதிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு தரித்து நின்ற நான்கு முச்சக்கரவன்டிகளின் முன் கண்ணாடி உட்பட அனைத்து கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு தப்பிக்க முயன்ற வேளை அங்கு வந்த பொலிஸாரினால் விரட்டி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 14 =

*