;
Athirady Tamil News

ஊடகவியலாளர் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு..!! (படங்கள்)

0

கடந்த-01.01.2017 அன்று யாழ்.கொக்குவிலிலில் படுகொலை செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு யாழ். நகரிலுள்ள ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபியடியில் இன்று புதன்கிழமை(01) பிற்பகல் இடம்பெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வு அமையத்தின் இணைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரட்ணம் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.

இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் தாய், தந்தையர் ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளரின் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி, ஊடகவியலாளர் துன்னாலை செல்வம் ஆகியோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மூத்த ஊடகவியலாளர் எம்.எல். லாபீர், ஊடகவியலாளர் அருமைத்துரை யசீகரன் உள்ளிட்டோர் இளம் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனை நினைவுகூர்ந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு முன்பாக ஈகைச் சுடரேற்றியும் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் ரட்ணம் தயாபரன் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சனின் பெற்றோர்கள், சகோதரன் மற்றும் உறவினர்களுடன் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 8 =

*