;
Athirady Tamil News

வவுனியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் அடித்துக்கொலை..!!

0

வவுனியா மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயசிங்கம் நிரோஜன் வயது 26 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே கொலைசெய்யபட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்

நேற்றயதினம் அப்பகுதியில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் மது அருந்தியதுடன் மாலை 5.30 மணியளவில் மயக்கநிலையில் குறித்த இளைஞனை அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து அவரது வீட்டினுள் கிடத்திவிட்டு சென்றுள்ளனர். வழமை போன்றே குறித்த நபர் மது அருந்துவதனால் அவரது மனைவி அதனை சிறுவிடயமாக எண்ணியதுடன் நீண்ட நேரமாகியும் கணவன் மயக்கநிலையில் இருந்து எழுந்திருக்காத நிலையில் சந்தேகமடைந்ததுடன் உறவினர்களுக்கும் தகவல் வழங்கியிருந்தார்.

பின்னர் உறவினர்கள் வந்துபார்த்தபொழுது அவரது வாய்ப்பகுதியில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதனால் இரவு 8 மணியளவில் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இன்று மாலை வவுனியா மாவட்ட மேலதிக நீதிவான் சடலத்தை பார்வையிட்டதுடன் மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் உள்ள அவரது வீட்டையும் பார்வையிட்டிருந்ததுடன் சட்டவைத்திய அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

சட்டவைத்திய அறிக்கையின் படி இளைஞனின் உடம்பில் அடிகாயங்கள் காணப்பட்டதுடன் தலையின் பின்பகுதியில் பெரிய காயம் ஏற்பட்டு நரம்பு வெடித்தமையாலேயே இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக இளைஞனின் தந்தை கூறும்போது நேற்று நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் பின்னர் மோதல் ஏற்பட்டதாகவும் தனது மகனை மது போதையில் சிலர் தாக்கியதாகவும் அதனாலேயே அவர் உயிரிழந்திருப்பதாகவும் பின்னர் வீட்டில் கொண்டுவந்து விட்டுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிட தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 10 =

*