;
Athirady Tamil News

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 270 பேர் பலி – 2-7-1968..!!

0

பிலிப்பைன்சில் 1968-ல் நடைபெற்ற பயங்கர நிலநடுக்கத்தில் 270 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1943 – போலந்தில் திரெபிலிங்காவதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.

* 1945 – இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜெர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.

* 1973 – மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் பலியானார்கள்.

* 1980 – இத்தாலியில் ரெயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

* 1989 – யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

* 1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.

* 1994 – பலாலி ராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

* 2006 – திரிகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் ராணுவ முகாம்களைத் தாக்கி மூதூர் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் நுழைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*