;
Athirady Tamil News

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் இரண்டு பேர் கைது..!!

0

புத்தளம், வான வீதி பிரதேசத்தில் ஒரு தொகை போதைப் பொருட்களுடன் இரண்டு சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் புத்தளம் பிராந்திய அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

சந்தேகநபரிடமிருந்து 10 கிராமும் 500 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் அகியன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

28 மற்றும் 20 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வேறு பிரதேசங்களில் இருந்து போதைப் பொருள் கொண்டு வந்து புத்தளம் பிரதேசத்தில் விநியோகிப்பதாக தெரிய வந்துள்ளது.

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*