;
Athirady Tamil News

உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் உதைபந்தாட்ட திருவிழா..!! (படங்கள்)

0

பருத்தித்துறை கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் உதைபந்தாட்ட நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிப்பதோடு சிறந்த கள வாய்ப்புக்களை உருவாக்கும் எத்தனிப்பாகவும்,வடமராட்சி இளைஞர் அணியின் வேண்டுகோளுக்கிணங்கவும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் ஆதரவுடன் மாபெரும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

முதல் மூன்று இடங்களை பெறும் அணிக்கு முறையே 75000,50000,25000 ரூபா வழங்கப்படுவதோடு, பெறுமதியான வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டு விவசாய பிரதி அமைச்சரினால் கௌரவிக்கப்பட உள்ளனர்.

நவ சக்தி விளையாடுக்கழகமும்,நவ ஜீவன்ஸ் விளையாட்டுகழகமும் மோதியிருந்தது.மேலதிக தண்ட உதை மூலம்1-0 என நவஜீவன்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.

நிகழ்வில் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் கந்தையா வைத்தியநாதன்,பாலரமேஸ் பருத்தித்துறை சுதந்திர கட்சியின் அலுவலக இணைப்பாளர் செல்வதீசன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டதோடு வெற்றி பெற்ற நவஜீவன்ஸ் அணிக்கு பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + ten =

*